விஜய்யை அதிமுக- பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரதான் இவ்வளவும்.. சீமான்
விஜய்யை அதிமுக- பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதையாவது பண்ணி விஜயை அதிமுக- பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும்,
அவரை உள்ளே போக விட்டுவிடக்கூடாது என்று ஒரு தரப்பும் செயல்பட்டு வருகிறார்கள். கரூர் சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு வேண்டாம் என்று விஜய் எதிர்க்கிறார்.
சீமான் கருத்து
கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு வேண்டாம் என்று திமுக எதிர்கிறது. இவர்கள் நேர்மையானவர்கள் என்றால் எதற்காக சிறப்பு விசாரணை குழுவைப் பார்த்து பயப்பட வேண்டும் இருவருமே திருடர்கள் தான். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.
விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன்? சிபிஐ விசாரணை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை?
சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்த நிரூபித்த பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சிபிஐ விசாரணை மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.