கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம்; அரசுக்கு அடி - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Vijay Tamil nadu Supreme Court of India Karur Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Oct 13, 2025 05:46 AM GMT
Report

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் வழக்கு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம்; அரசுக்கு அடி - உச்சநீதிமன்றம் உத்தரவு! | Karur Case Transferred To Cbi For Investigation

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி செந்தில்குமார் இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​து உத்​தர​விட்டிருந்​தார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா,

என்னதான் கருத்துவேறுபாடெல்லாம் இருந்தாலும்.. நான் விஜய்க்குதான் சப்போர்ட் - எச். ராஜா

என்னதான் கருத்துவேறுபாடெல்லாம் இருந்தாலும்.. நான் விஜய்க்குதான் சப்போர்ட் - எச். ராஜா

சிபிஐக்கு மாற்றம்

கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேர் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது ஏன்?

supreme court

ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என கருத்து தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை. அஸ்ரா கார்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார் என்றார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவர்.