விஜய்யுடன் கூட்டணி; பாஜகவை கழட்டிவிடப்போறார் இபிஎஸ் - டிடிவி ஒரே போடு..
விஜய் வந்தால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விஜய்யுடன் கூட்டணி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன் கட்சியின் தொண்டர்களை வைத்தே விஜய்யின் டிவிகே கொடியை தன் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடிக்க செய்துள்ளார்.
இதில் இருந்தே தெரிகிறது, விஜய்யின் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்று.. அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது அப்படி விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி வைத்தால்,
டிடிவி கருத்து
பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார். பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார். இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்வாரா?
நடக்காத ஒன்றை ஏன் பேசுகிறீர்கள். அதிமுக பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன போதில் இருந்தே அந்த கூட்டணி பலவீனமாகி கொண்டு தான் இருக்கிறது.
வரும் தேர்தல் முடிவில் பார்த்தீர்கள் என்றால் அதிமுக கூட்டணி வெறும் 15 சதவீதத்துக்கு கீழ் தான் வரும் என்று தெரிவித்துள்ளார்.