ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..தவெக விஜய் எடுத்த முடிவு - வெளியான அறிவிப்பு!

Vijay Tamil nadu Erode Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Jan 17, 2025 08:26 AM GMT
Report

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வில்லை எனத் தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.

tvk announced erode by election boycott

திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமியும் போட்டியிட உள்ளனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வில்லை எனத் தமிழக வெற்றிகழகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரம்..மாநில அரசால் ரத்து செய்ய முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவர் பதிலடி!

நீட் தேர்வு விவகாரம்..மாநில அரசால் ரத்து செய்ய முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவர் பதிலடி!

இதுதொடர்பாக த.வெ.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும்,

தவெக

அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும்,

tvk announced erode by election boycott

ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.