உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி - தவெக தலைவர் விஜய் மே தின வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர்கள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 1-ம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில்,
உறுதியேற்போம்
தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்ககத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து விசில் போடு என்ற பாடல் வெளியாகியிருந்தது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil