டிவி நேரலையில் சரிந்து விழுந்த செய்தியாளர்; பதறிய நேயர்கள் - அதிர்ச்சி சம்பவம்!

Summer Season West Bengal
By Swetha Apr 22, 2024 05:44 AM GMT
Report

நேரலை நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விழுந்த செய்தியாளர்

கோடைகாலம் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் தற்போது வெயில் வாட்டி வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவஸ்தைபட்டு வருகின்றனர். தொடர்ந்து வெப்பநிலை உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.

டிவி நேரலையில் சரிந்து விழுந்த செய்தியாளர்; பதறிய நேயர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Tv The Host Who Collapsed In The Live Show

முக்கியமாக முதியவர்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள் , இணைநோய் இருப்பவர்கள் 10 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்திலும் கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் பாடுபடுகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் ஒருவர் நேரலையில் செய்திகளை வழங்கிய போது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இந்த சம்பவம் நேரலையில் ஒளிப்பரபாகியது இதனை பார்த்த நேயர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

என்னோட ஷோவ விட்டு வெளியே போங்க : அக்தரை அசிங்கப்படுத்திய தொகுப்பாளர் , வைரலாகும்  வீடியோ

என்னோட ஷோவ விட்டு வெளியே போங்க : அக்தரை அசிங்கப்படுத்திய தொகுப்பாளர் , வைரலாகும் வீடியோ

அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்கம் தூர்தர்ஷனின் கொல்கத்தா கிளையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேரலை செய்தியின் போது லோபமுத்ரா சின்ஹா ​​என்ற பத்திரிகையாளர் சரிந்து விழுந்தார். இது குறித்து பத்திரிக்கையாளர் தனது உடல்நிலை பற்றி கூறி இணையத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

டிவி நேரலையில் சரிந்து விழுந்த செய்தியாளர்; பதறிய நேயர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Tv The Host Who Collapsed In The Live Show

அதில், செய்தியாளர் நேரடி செய்தி ஒளிபரப்பின் போது அவரது இரத்த அழுத்தம் கடுமையாக சரிந்ததாகவும், இதனால் அவர் மயங்கியதாகவும் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், ஒரு கிளாஸ் தண்ணீர் தனக்கு நன்றாக இருக்கும் என்று கருதி தண்ணீரைக் குடிக்க நினைத்துள்ளார்.

இருப்பினும், செய்தி நேரலையில்  நீரேற்றம் செய்வதற்கான வாய்ப்பு இல்லாததால் லோபாமுத்ரா நிகழ்ச்சியில் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் சின்ஹாவுக்கு தங்களின் அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.