என்னோட ஷோவ விட்டு வெளியே போங்க : அக்தரை அசிங்கப்படுத்திய தொகுப்பாளர் , வைரலாகும் வீடியோ

shoaibakhtar liveshow t2oworldcup
By Irumporai Oct 27, 2021 07:39 AM GMT
Report

டிவி நேரலை நிகழ்ச்சியில் இருந்து சோயிப் அக்தரை வெளியேறுமாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுதொடர்பான விவகாத நிகழ்ச்சி பாகிஸ்தான் தேசிய ஊடகமான பி டி.வி-யில் நேரலையில் நடந்து வந்தது. அப்போது நெறியாளர் நவுமன் நியாஸை , சோயிப் அக்தர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

அதாவது நெறியாளர் நவுமன் நியாஸ், நியூசாலந்து - பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற காரணமாக இருந்தவர் ஹரிஸ் ரஃவுப் என்று புகழ்ந்து பேசினார்.

அதை அமோதித்து பேசிய அக்தர், அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ஆகிப் தான் இதற்கெல்லாம் காரணமானவர் என்றார். இதையடுத்து பேசிய நெறியாளர் நவுமன், சோயிப்பை பார்த்து நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். இதைக் கூற நான் விரும்பவில்லை, இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம்.

இதனை நான் லைவ்-ல் கூறுகிறேன் என்று தெரிவித்தார். சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அக்தர், நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே வெளியேறினார்.

அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், லைவ் ஷோவில், இந்த தேசத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன், பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என அக்தர் தெரிவித்துள்ளார்.