பல பெண்களுடன் தொடர்பு.. Breakup ஆன சில நாட்களில் தற்கொலை செய்த 20 வயது நடிகை!
காதலன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
துனிஷா சர்மா
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20). இந்நிலையில், மும்பை தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே
நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், துனிஷாவும், சீசன் மொகமத் கானும் காதலித்து வந்துள்ளனர்.
தற்கொலை
அவர்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் பிரேக் அப் செய்து கொண்டுள்ளனர். மொகமத் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது.அதனால் தான் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டதாக துனிஷாவின் மாமா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக மொகமத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.