காணாமல் போன 5 வயது சிறுவன்; மாடியில் சடலமாக மீட்பு - பகீர் பின்னணி!
காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மாயம்
தூத்துக்குடி, கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக கருப்பசாமிக்கு அம்மை நோய் தாக்கியிருந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
தொடர்ந்து காலை வழக்கம் போல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, வீட்டில் கருப்பசாமி மட்டும் தனியாக இருந்துள்ளார். திடீரென சிறுவன் மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து 3 நாட்களாக சிறுவனை தேடி வந்தனர்.
அப்போது பக்கத்து வீட்டின் மாடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பசாமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியும், விரலில் அணிந்திருந்த ஒரு கிராம் மோதிரமும் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.