ஜடேஜாவை பிராங்க் பன்ன சொன்னதே தோனி தான் - ரகசியம் உடைத்த தேஷ்பாண்டே!
ஜடேஜா பிராங்க் வீடியோ குறித்த தகவலை துஷார் தேஷ்பாண்டே பகிர்ந்துள்ளார்.
Chennai Super Kings
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதில், அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், சிவம் துபே அவுட் ஆனார்.
துஷார் தேஷ்பாண்டே
அடுத்ததாக தோனி களம் இறங்குவார் என எதிர்பார்த்த நேரத்தில் ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய வந்தார். ஆனால், உடனே திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்குள் ஓடிவிட்டார்.
Dhoni bhai instructed Jadeja, 'I will go for batting' but you just act like you are going ?
— JONAS ? (@ItzCric_tweets7) April 9, 2024
- Tushar Deshpande#MSDhoni? #RavindraJadeja pic.twitter.com/MEdnC3qLE2
இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது. அதன்பின், இறங்கிய தோனிக்கு ரசிகர்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, 'நீ பேட்டிங் செய்யக் கிளம்புவதைப் போல் நடி, அப்போது நான் களத்திற்குள் செல்கிறேன்' என தோனி ஜடேஜாவிடம் சொன்னதைக் கேட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.