ஸ்வீடனில் குரான் எரிப்பு; நேட்டோவில் இடமில்லை - கொந்தளித்த துருக்கி!

Turkey Sweden NATO
By Sumathi Jan 24, 2023 04:38 AM GMT
Report

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஆதரவு தரப்போவதில்லை என துருக்கி தெரிவித்துள்ளது.

குரான் எரிப்பு

ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறி வருபவர். இவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயில் எரித்தார்.

ஸ்வீடனில் குரான் எரிப்பு; நேட்டோவில் இடமில்லை - கொந்தளித்த துருக்கி! | Turkish Muslims Protest Quran Burning In Sweden

இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். தொடர்ந்து, இம்மாதிரியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடன் அரசை கண்டித்து துருக்கியில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

கொந்தளித்த துருக்கி

முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கு விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் உறுப்பினரான துருக்கி உள்ளது.

இந்தச் சூழலில் ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கியால் எதிர்க்கவும் நிறுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.