துருக்கி, சிரியாவில் பேரழிவு: மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம் - மு.க.ஸ்டாலின் உருக்கம்

M K Stalin Earthquake Death Turkey Earthquake
By Sumathi Feb 07, 2023 04:18 AM GMT
Report

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்காக 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது.

துருக்கி, சிரியாவில் பேரழிவு: மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம் - மு.க.ஸ்டாலின் உருக்கம் | Turkey Earthquake Death Mk Stalin Condolences

அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்களும், மருந்துகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலின் வேண்டுகோள்

அதில், “துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அளவிலான உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சேதங்கள் வேதனையளிக்கிறது.

இந்தத் துயர்மிகு நேரத்தில் என் இதயம் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் மக்களுக்காக இரங்குகிறது. நாம் அனைவரும் ஒருமித்து நின்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவோம்” என்று கூறியுள்ளார்.