மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும் - மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையாற்றினார்.
மாநில மாநாடு
கேரள, திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 3-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இன்று மத்திய மாநில அரசுகளின் உறவு என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது மலையாளத்தில் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை போன்று தான் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன் என்றார். திமுக கம்யூனிஸ்ட் நட்பு என்பது கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நட்பு தொடர்ந்து வருகிறது. நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும், திமுக கட்சி கொடியிலும் பாதி சிவப்பு நிறம் உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும் என்பதை மலையாளத்தில் இந்தியாவை முழுவனுக் காக்கனும் எங்கின் ஆத்தேம் சமஸ்தானங்களை நம்மேன் காக்கனும் என மலையாளத்தில் பேசினார்.
கம்யூனிஸ்ட் கட்சி
சகோதரத்துவம், சமூக நீதியை நிலை நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார். சமூக நீதியை நிலை நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார். ஜி எஸ் டி மூலம் மாநில நிதி உரிமையை ஒன்றிய அரசு பறித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஆளுனர்களை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர முயற்சி மேற்கொள்கிறது என சாடினார்.
திராவிட இயக்கம் உருவாகவில்லை என்றால் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பேன் என கருணாநிதி சொன்னார் என்றும், அது மனப்பூர்வமாகச் சொன்னது என்பதன் அடையாளம் தான் தனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது என தெரிவித்தார்.