75 ஆண்டுகால பயணம்; மூடப்படும் டப்பர்வேர் நிறுவனம் - என்ன காரணம்?
பிரபல அமெரிக்க நிறுவனம் 75 ஆண்டுகால பயணத்தை முடிக்கவுள்ளது.
டப்பர்வேர் நி்றுவனம்
பிரபல அமெரிக்க நி்றுவனம் டப்பர்வேர். இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு உயர்ந்த இடத்தில் உள்ளது. காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் புகழ் பெற்றது.
இந்த நிறுவனம் பெண் முகவர்கள் மூலம் 75 ஆண்டுகளாக உலகமெங்கம் தனது தயாரிப்புகளை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வந்தது. தொடர்ந்து கொரோனா காலத்திற்கு பிறகு 2020ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்திற்கு கடன் அதிகரித்து விற்பனை சரிவை சந்தித்து வருகிறது.
கடன் அதிகரிப்பு
1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்துள்ள இந்நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துள்ளது. தற்போது மெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் கடனில் இருந்து மீள முடியாமல் திவால் நோட்டீஸை அளித்துள்ளது.
இந்நிலையில் கடனை அடைக்க, முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்துள்ளது. இருப்பினும், சந்தையில் பெரியளவு வரவேற்பு இல்லாததால் நிறுவனத்தை மூடும் முடிவில் டப்பர்வேர் உறுதியாக உள்ளது.

Viral Video: படமெடுத்து கோபத்தை வெளிப்படுத்திய பாம்பு... சாமர்த்தியமாக பிடித்து மிரட்டிய நபர் Manithan
