உலகிலேயே மிக உயரமான சிவன் கோவில் இதுதான் - எங்கு உள்ளது தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான சிவன் கோயில் குறித்த தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
சிவன் கோயில்
உத்தரகண்ட், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள துங்கநாத் கோவில் உலகின் மிக உயரமான சிவன் கோயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது, கர்வால் ஹிமாலயாஸில் சோப்தா என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,680 மீட்டர் அதாவது 12,073 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆகாய தலமாக குறிப்பிடப்படுகிறது.
எழில் கொஞ்சும் இயற்கை
சோப்தாவிலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாதை வழியாக இந்த கோவிலை அடையலாம். வழி முழுவதுமேபசுமையான புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள் என எழில் கொஞ்சும் விதமாக அமையப்பெற்றுள்ளது.
மேலும் ஆன்மீக முக்கியத்துவம் தவி துங்கநாத், சுற்றுப்புறப் பகுதிகள் மலையேற்றம், முகாம் மற்றும் பறவைகளைப் பார்ப்பது, சாகசக்காரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் பல்வேறு சாகச நடவடிக்கைகள் என பலவற்றை கொண்டுள்ளது. இந்த பயணம் பெரும்பாலான வயதானவர்கள் கூட அணுகக்கூடியதாக உள்ளது சிறப்பிற்குரியது.