போட்டியில் சீன வீரர்களை மண்ணை கவ்வ வைத்த இந்திய ராணுவத்தினர் - என்ன போட்டி'னு தெரியுமா??
இந்தியா சீனா ராணுவ வீரர்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் ஆப்ரிக்காவில் உள்ள சூடானில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா வீரர்கள் சூடானில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய ஆதரவாளர்கள் "இந்தியா இந்தியா.." என்று கோஷமிட்டனர். அதே நேரத்தில் சீன ஆதரவாளர்களும் தங்கள் அணியை உற்சாகப்படுத்தினர். சீன வீரர் முதலில் மையக்கோட்டை தாண்டியதால் இந்தியா வெற்றி பெற்றது. இந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கயிறு இழுத்தல் டக் ஆஃப் வார் என்பது இரண்டு அணிகள் ஒரு கயிற்றின் எதிர் முனைகளை இழுக்கும் போட்டியாகும்.
எதிர் அணியை மைய கோட்டின் மறுபுறம் இழுக்கும் அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அமைதி காப்போருக்கான சர்வதேச நாள் 76 ஆண்டுகளாக, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் உலகின் மிகவும் பலவீனமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றவும் பாடுபட்டு வருகின்றனர்.
இன்று, உலகெங்கிலும் 11 திட்டங்களில் 70,000 க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் படையினர் பணியாற்றுகின்றனர்.
அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு பாலரையும் பெருமைப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை நினைவூட்டுவதற்காகவும் மே 29 ம் நாள் ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்தியது.