மக்களவை தேர்தல் - தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
டிடிவி தினகரன்
பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபாலன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி தொகுதியில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு தொகுதியாக இது கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே கூட்டணியில் உள்ளதால் டிடிவி தினகரன்க்கு சாதகமாக அமையும் என கருதப்பட்டது.
3வது இடம்
தற்போதைய வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக சார்பில் களம் இறங்கிய தங்க தமிழ்செல்வன் முன்னிலை வகிக்கிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி 2 வது இடத்தில் நீடிக்கிறார்.
திமுக தங்க தமிழ்செல்வன் - 23,820
அதிமுக நாராயணசாமி - 13,578
அமமுக டிடிவி தினகரன் - 13,525
நாதக மதன் ஜெயபாலன் - 3,383