வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம் - முதல்வர் கொடுங்கோலராகவே உள்ளார் - டிடிவி தினகரன்
தேனீ மக்களவை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளரான அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
டிடிவி பிரச்சாரம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனீ தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். ஓபிஎஸ்'ஸும் அக்கூட்டணியில் இருப்பது டிடிவி தினகரனுக்கு லாபமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தேனீயில் கடந்த முறை ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன், மாநில ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
கொடுங்கோலர்...
போடிநாயக்கனூர் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது வருமாறு, துண்டுச்சீட்டு முதல்வருக்கு யார் எழுதிக் கொடுப்பது என்பது தெரியவில்லை. என் மீதுள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.
தேனி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காலை முதல் உச்சி வெயிலில் போலீசார், பெண் போலீசார் நிற்க வைக்கப்பட்டிருக்கின்றனர். கருணாநிதி எந்த நேரத்தில் ஸ்டாலின் என பெயர் வைத்தாரோ தெரியவில்லை.
இந்த ஸ்டாலின் கொடுங்கோலராக இருக்கிறார். வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம் செய்த ஊழலால் ஆட்சியே கலைக்கப்பட்டது.
கச்சத்தீவை இந்திரா காந்தி தாரைவார்த்தபோது, சர்காரியா கமிஷனால் உள்ளே சென்றுவிடுவோம் என கருணாநிதி கச்சதீவை விட்டுக்கொடுத்தார். இப்பொது போதைப்பொருள் விற்கும் கட்சியாக திமுக இருக்கிறது.