பிரச்சாரத்தின் போது புறக்கணித்தாரா உதயநிதி? அதிருப்தி தெரிவிக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்
தர்மபுரியில் தங்களது கட்சி நிர்வாகிகளை உதயநிதி புறக்கணித்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகம் முழுவதும் பயணித்து வரும் அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றார்.
சென்ற தேர்தலில் அவர் கையாண்டு எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். அதே போல தற்போதும் தனக்கென தனிப்பாணி ஒன்றை வைத்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் உதயநிதி ஸ்டாலின்.
வருத்தம்
அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தர்மபுரியில் கட்சி வேட்பாளர் மணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளின் பெயர்களை அநேக பிரச்சாரங்களின் போதும் கூறுவதை நாம் கண்டுள்ளோம்.
ஆனால், தர்மபுரியில் தங்களது கட்சி நிர்வாககிகளின் பெயரை உதயநிதி கூறவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறுதலாகவே விட்டுருப்பார் என அவரது கட்சி நிர்வாகிகள் கூறும் நிலையில், உதயநிதியின் இந்த செயல் தங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கொ.ம.தே.க.வினர் தெரிவித்துள்ளனர்.