சீமான் அதற்காக தரம் தாழ்ந்து பேசி வருகிறார் - டிடிவி தினகரன் கண்டனம்
திருமாவளவன் குழப்பத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் மது ஒழிப்பு படிப்படியாக சாத்தியமாகும். திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவே திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார் என பேசினார்.
திருமாவளவன்
மேலும், திருமாவளவன் மது ஒழிப்பு கொள்கையில் ஆரம்பத்திலிருந்து தீவிரமாக உள்ளார். ஆனால் சமீப காலமாக அவர் குழப்பத்தில் இருக்கிறார். அதனால்தான் அந்தப்பதிவை அட்மின் போட்டதாக தெரிவிக்கிறார்.
பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சியில் முறைகேடு அதிகரித்ததால், திமுக திருந்திவிட்டதாக நினைத்து மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் பழனிசாமி ஆட்சியை விட திமுக ஆட்சி மிக மோசமாக உள்ளது.ஆனால் பழனிசாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு, திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி வருகிறார்.
சீமான்
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுக்கு பழனிசாமி முடிவு கட்டி விடுவார். பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர வாய்ப்பு இல்லை.
எதிர்மறையான கருத்துக்களை பேசினால்தான் பிரபலமாக முடியும் என்பதற்காக மறைந்த தலைவர்கள், போலீசார், பிற துறைகள் சார்ந்தவர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசுகிறார் சீமான். இது வருத்தம் அளிக்கிறது" என பேசியுள்ளார்.