தமிழகத்தை பாலைவனமாக்கும் - பேச்சுவார்த்தைக்கே இடமளிக்கக் கூடாது - தினகரன் கொந்தளிப்பு

Tamil nadu Karnataka TTV Dhinakaran
By Karthick Jun 18, 2024 08:06 AM GMT
Report

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைத்தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு,

டிடிவி பதிவு 

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது - அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

TTV Dhinakaran

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது - அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.  

அதிமுகவில் அமமுக இணைகிறதா? டிடிவி தினகரன் திட்டவட்டம்!

அதிமுகவில் அமமுக இணைகிறதா? டிடிவி தினகரன் திட்டவட்டம்!

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேகதாது அணை குறித்த அமைச்சர் திரு.சோமண்ணா அவர்களின் பேச்சு தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலையாக...

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு.சோமண்ணா அவர்களை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கும் போதே, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை நியாயமாக்கும் வகையில் அவரது செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 Angry TTV dhinakaran

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பது திரு.சோமண்ணா அவர்கள் வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தை பாலைவனமாக்கும் - பேச்சுவார்த்தைக்கே இடமளிக்கக் கூடாது - தினகரன் கொந்தளிப்பு | Ttv Dhinakaran Post In Megadathu Dam Issue

எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என திரு.சோமண்ணா அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்