அதிமுகவில் அமமுக இணைகிறதா? டிடிவி தினகரன் திட்டவட்டம்!
தினகரன் பதில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் புகழேந்தி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்
டிடிவி தினகரன் அளித்த பதில் வருமாறு,
புகழேந்தி பேசுவது அதிமுகவை பற்றி, நாங்கள் அமமுக குறித்து பேசுறோம். 7 ஆண்டுகளாக அந்த சுயநல மனிதரான பழனிசாமியை எதிர்த்து வருகின்றோம். முடிவை நான் தனி மனிதராக எடுக்க முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.
ஆனால், ஒரு சிலர் அழித்து வருகிறார்கள். அம்மா உருவாக்கிய கட்சி இன்றைக்கு பலவீனமடைந்து வருகின்றது.தவறானவர்களின் கட்சி சென்றதால் தான் அமமுக கட்சியே துவங்கினோம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்து விட்டது. இரட்டை இலை இருந்தும் சோபிக்கவில்லை. திமுகவிற்கு பி டீமாக இருந்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என செயல்பட்டிருக்கிறார்.
அப்போது யோசிக்கலாம்
2026-இல் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி போராடி வருகிறது. அப்போது ஆளும் கட்சியின் பணம் பலம் பலிக்காது. பெரிய தோல்வியை 2011-இல் பெற்ற தோல்வியை திமுக சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வெற்றி பெறுவோம். இன்றைக்கும் அதிமுக இருக்கும் தொண்டர்கள் தங்களை ஏமாற்றி கொள்ளாமல், அவர்களே புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
அதிமுகவுடன் அமமுக கூட்டணி என்ற hypothetical கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளாக தேனீ இரட்டை இலையின் கோட்டையாக இருந்தது. ஆனால், இப்பொது டெபாசிட் போய்விட்டது. காரணம் பழனிசாமி. ஒரு புரட்சி தலைவர் தான், ஒரு அம்மா தான். அந்த சீட்டில் உட்கார்ந்து விட்டால் மட்டுமே போதாது.
அதனால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் துவங்கி இப்பொது வரை தோல்வி தான் பெறுகிறார்கள். அவர்களே தவறை உணர்ந்து திருந்தினால் தான், அம்மாவுடைய இயக்கம் பலப்படும். இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எந்த காரணத்திற்காக விலகினோமோ அதில் கடுகளவும் மாற்றமில்லை. தவறான தலைமை உள்ளது.அது இருக்கும் வரை நாங்கள் இணைவதாக இல்லை.அதிமுக தொண்டர்கள் நல்ல முடிவை எடுக்கும் போது, அது குறித்து யோசிப்போம்.