அதிமுகவில் ஓபிஎஸ் ; ஜோக்கர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை - டிடிவி தினகரன்
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் இணைக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.
ஓபிஎஸ் - அதிமுக
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியின் ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
அதிமுகவை ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் இணைவார்கள் என்று நீண்டகாலமாக தகவல் வெளியாகி இருந்தது. அது தொடர்பாக சசிகலாவும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தார்.
ஓபிஎஸ் தான் விரைவில் உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பேன் என்றும் கூறி வருகிறார்
டிடிவி பதில்
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சாத்தியமே இல்லை என இருவரும் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஓபிஎஸ் உடன் நெருக்கமாக உள்ள அமமுக கட்சி பொது செயலாளரான டிடிவி தினகரனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது "யார் யாரோ பேசுறதெல்லாம் வச்சு என்கிட்ட கேக்காதீங்க.
ஜோக்கர் மாதிரி பேசுபவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.