அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் - அண்ணாமலை விளக்கம்!
டிடிவி தினகரனை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
அதிமுக கூட்டணி
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்த போது நான் சென்னைக்குக் வெளியே இருந்தேன். திமுக கூட்டணியை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்.
அதில் டிடிவி தினகரனின் பார்வை குறித்து பேசினோம். அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சில மனஸ்தாபங்கள் மாறும் என நினைக்கிறேன். இன்னும் காலம் இருக்கிறது. காத்திருப்போம். அரசியலில் கூட்டணி என்பது மாறும்.
அண்ணாமலை விளக்கம்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வேண்டும். சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும் சந்திப்பேன். முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜயின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் ‘பாஜகவின் பி-டீம்’ என்கிறார்கள்.
விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார். சபாநாயகர் அப்பாவு, பாஜக போபியாவில் இருந்து வெளியே வர வேண்டும். ரஜினியை மாதம் ஒருமுறை சந்திப்பேன். ஆன்மீகம் பற்றி பேசுவோம்.” என தெரிவித்துள்ளார்.