விஜய் ரொம்ப அகந்தையில் பேசுறாரு.. பாஜக கொடுக்குற தைரியம் - அப்பாவு
விஜய்யின் பேச்சில் அகந்தைத் தெரிவதாக சபா நாயகர் அப்பாவு குற்றம் சாட்டி உள்ளார்.
பின்னணியில் பாஜக
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாகப் பேசியதாகப் பல பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.
முதலமைச்சரை மிரட்டும் தொணியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோகால் வேறு.
அப்பாவு குற்றச்சாட்டு
பிரதமர் மற்றும் முதல்வர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனத்துடனும் இருக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் என பிரதமர் சொல்லியுள்ளார்.
அப்படியானால், இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார்? மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.