எச்சில் தான் பிரசாதம் - நூதன சித்தரிடம் ஆசிப்பெற்ற டிடிவி தினகரன்
நூதனமான தொப்பி சாமியாருடன் அண்மையில் டிடிவி தினகரன் ஆசி பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தொப்பி சாமி
நாட்டில் நூதனமான சாமியார்கள் அவ்வப்போது வளம் வருவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது. அப்படி ஒருவர் தான் தற்போது திருவண்ணாமலை பகுதிகளில் வளம் வருகிறார்.
தொப்பி சாமி என்றழைக்கப்படும் அச்சாமியார் தினமும் 3 முறை கிரிவலம் வருகிறார் என்றும் அவர் கடந்த 18 ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொப்பி அம்மா வாயை திறந்து பேசவே மாட்டாராம்.
ஆசிப்பெற்ற டிடிவி
இதில் வினோதம் என்னவென்றால் அவரின் எச்சில் தான் பிரசாதம் என்கிறார்கள். இவரை தான், தற்போது தேனீ மக்களவை தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆசி பெற்றார்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் வாராகி அம்மன் கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற டிடிவி தினகரன், தொப்பி சாமி வருவதை அறிந்து அவரிடமும் ஆசி பெற்றார்.
ஏற்கனவே பிரபலமாக இருந்த மூக்குப்பொடி சித்தரிடமும் டிடிவி தினகரன் ஆசி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.