முதல்வரை அப்படி பேசுவதை ஏற்க முடியாது - திடீரென அரசுக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்
முதல்வரை குறித்து சவுக்கு சங்கர் பேசுவதை ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். தொடர்ந்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆனால், அதனை நேற்று அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், மற்றொமொரு நீதிபதி பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதன் காரணமாக, தீர்ப்பு தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்க முடியாது
இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவுக்கு சங்கர் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெறும் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பெண் காவல்துறை உயரதிகாரிகள், என பலரையும் சவுக்கு சங்கர் பற்றி நினைத்ததை எல்லாம் பேசலாம் என்றால் அது எந்த வகையில் நியாயம்? என்றும் அதனை ஏற்கமுடியாது என்றார் . அவர் மீது எடுக்கும் நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார் டிடிவி.