சவுக்கு சங்கர் - அண்ணாமலை போன் ரெக்கார்ட் எடுங்க - கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
சவுக்கு சங்கர்
யூடியூப் தளங்களில் அரசியல் கருத்துக்களை பேசி பெரும் பிரபலமான சவுக்கு சங்கர், பெண் காவலர்களை குறித்து தவறாக பேசி காரணத்தால், கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கஞ்சா வழக்கும் பதியப்பட்டுள்ளது. இன்று மாலை வரை நீதிமன்ற காவலில் இருக்கும் அவரை குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு புகார்
அதாவது, சவுக்கு சங்கர் - பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மந்தம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் சார்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சவுக்கு சங்கர், ஜெரால்ட் பெலிக்ஸ் ஆகியோர் தேசத்திற்கும் மாநிலத்திற்கும் எதிராக செயல்படுகின்றனர் என்றும் அவர்களை இயங்குவதே அண்ணாமலைதான் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சவுக்கு சங்கர் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு கடந்த ஒரு வருட ரெக்கார்டை எடுத்தாலே எல்லாமே சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.