முத்துராமலிங்கரை குறித்து அவதூறு கருத்து - சவுக்கு சங்கர் மேலும் ஒரு பரபரப்பு புகார்
முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர்
யூடியூப் சமூகவலைதளத்தில் அரசியல் விமர்சகராக இருந்த சவுக்கு சங்கர் பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது தேனீ வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கோவை மத்திய சிறையில், அடைக்கப்பட்டுள்ள அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் வந்த வண்ண ம் உள்ளன. அதன் காரணமாக அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது.
முத்துராமலிங்க தேவர்
தொடர்ந்த்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் மற்றுமொரு பரபரப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதாவது, வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்துள்ள புகாரில், பெலிக்ஸ் ஜெரால்டின் ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகவும் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே லவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது கஞ்சா, பெண் காவலர்கள், தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி என பலரும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.