அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறும் சசிகலா - விலகி நிற்கும் முடிவு டிடிவி!
துவங்கிய சசிகலா
செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி, பிரிந்து கிடைக்கும் அணிகளை ஒன்றிணைத்து 2026'இல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கப்போவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவர்களா? என்ற கருத்துக்கள் அதிகளவில் எழுந்தன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியது வருமாறு,
என்னுடைய Entry துவங்கிவிட்டது ...தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது !! தொண்டர்களை குஷியாக்கிய சசிகலா
டிடிவி மறுப்பு
2017-ஆம் ஆண்டு எதனால் அமமுகவை துவங்கினோம் என அனைவரும் தெரியும். அது இன்னும் தொடருகிறது. பழனிசாமி என்ற தீய மனிதர் அங்கு பொதுச்செயலாளராக இருக்கும் வரை அங்கு எப்படி சேர முடியும்.
2017-இல் இருந்த நிலையே இருப்பதால், மீண்டும் ஒன்றினையும் வார்த்தைக்கே இடமில்லை.
அதிமுக தொண்டர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்யணும். இரட்டை இலை பலவீனமாக உள்ளது. அவர்கள் நல்ல முடிவு எடுக்காத வரை, அவர்களோடு நாங்கள் சேர்வோம் என கேள்வி கேட்பது தவறானது.