இந்த 22 தொகுதிகள் வேண்டும் - லிஸ்ட் போட்டு கொடுத்த டிடிவி தினகரன் - என்ன செய்யும் பாஜக..?
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன.
பாஜக கூட்டணி
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதில், பாஜகவுடன் கிருஷ்ணாசாமியின் புதிய தமிழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி என பல கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
22 தொகுதிகள்
ஆனால், அதே நேரத்தில் பாஜக டிடிவியின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி இரு தரப்பையும் தங்களுடன் சேர்த்து கொள்ளவும் பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டது.
இதில், டிடிவி தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கூட்டணியில் அமமுகவிற்கு 22 தொகுதிகள் வேண்டும் என்றும் அந்த தொகுதிகளுக்கான பட்டியலையும் அவர் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் சென்னை, வட சென்னை, அரக்கோணம், ஆரணி, தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், மதுரை, திருப்பூர், சிதம்பரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, விருதுநகர் மற்றும் நெல்லை போன்ற தொகுதிகளை டிடிவி குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமமுகவின் இந்த கோரிக்கைக்கு பாஜக என்ன முடிவெடுக்கும் என்பதை குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது