கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசு தான் - டிடிவி தினகரன்!

Tamil nadu Kallakurichi TTV Dhinakaran
By Jiyath Jun 24, 2024 02:24 AM GMT
Report

கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசு தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசு தான் - டிடிவி தினகரன்! | Ttv Dhinakaran About Kallakurichi Issue

இந்நிலையில், அவர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் "கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம்.

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

திமுக அரசின் தோல்வி

தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்புகள் ஏற்படாதவாறு முதல்வர் தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு முதல்வர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசு தான் - டிடிவி தினகரன்! | Ttv Dhinakaran About Kallakurichi Issue

காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசு தான். இது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.