maggi சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி ; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி - பீதியில் மக்கள்!
மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகியை விரும்பி உண்ணுவது உண்டு. வெறும் 2 நிமிடங்களில் சமைத்துவிடலாம் என்பதற்கே மிகவும் பிரபலமானது.ஆனால் முன்பு இதில் உள்ள வேதி பொருட்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று தடை செய்யப்பட்டது. பிறகு மீண்டும் சந்தைக்கு வந்தது.
இருப்பினும் இதனை உட்கொள்வது நல்லது இல்லை என்று பலவேறு தரப்பு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம்ஹசாரா பகுதியில் உள்ள ராகுல் நகரில் வசிக்கும் குடும்பம் ஒன்று மேகி செய்து சாப்பிட்டுள்ளனர்.
குழந்தை பலி
அப்போது துரதிர்ஷ்டவசமாக மேகி சாப்பிட்ட சில நிமிடங்களில் 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மேகி சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து அனைவரும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்துள்ளனர். இருப்பினும் 10 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.