எடப்பாடியுடன் கூட்டணி வைப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம் - சொன்னது யார் தெரியுமா?

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami TTV Dhinakaran
By Sumathi Sep 16, 2025 12:59 PM GMT
Report

எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

எடப்பாடியுடன் கூட்டணி

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

ttv dhinakaran - edappadi palanisamy

“எடப்பாடி பாஜக விற்கு நன்றி செலுத்த கூட்டணி வைத்துள்ளதாக கூறிவது சாத்தான் வேதம் ஒதுவதுதான். எடப்பாடியை காப்பாற்றியது பாஜக அல்ல, கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்கள் தான்.

எடப்பாடி பொய் சொல்கிறார். பொய்மூட்டை பழனிசாமி. 2026 தேர்தலில் தமிழக மக்கள் பழனிசாமியை உறுதியாக புறக்கணிப்பார்கள்.

மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன் - சர்ச்சை பேச்சால் வருத்தம்!

மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன் - சர்ச்சை பேச்சால் வருத்தம்!

டிடிவி விமர்சனம்

இரட்டை இலையையும் பணப் பலத்தையும் வைத்து டெல்லியுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடிக்கு உள்ள 20 சதவிகித வாக்கு 10 சதவிகிதமாக குறைந்துவிடும். அமமுக எடப்பாடியுடன் கூட்டணியில் சேர சான்ஸ்லே இல்லை.

எடப்பாடியுடன் கூட்டணி வைப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம் - சொன்னது யார் தெரியுமா? | Ttv Dhinakaran About Alliance Edappadi Palanisamy

யூடியூப் சேனல்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நன்றியை பத்தி பேசுவதற்கு எடப்பாடிக்கு தகுதி இல்லை. எல்லா பிரச்னைக்கும் பழனிசாமி தான் காரணம். நயினார் நாகேந்திரன் மாற்றி மாற்றி பேசுகிறார்.

நான் ஒருபோதும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். நயினார் நாகேந்திரனிடம் நான் அப்படி பேசவில்லை. 2026 பிறகு எடப்பாடி நடுத்தெருவில் நிற்பார்” என தெரிவித்துள்ளார்.