மல்லை சத்யா புது கட்சி தொடக்கம் - கட்சி கொடியை பாருங்க..
மல்லை சத்யா இன்று புதிய கட்சியை துவங்கி, கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.
மல்லை சத்யா
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும்
முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யா தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
பின் அவரிடம் விளக்கம் பெறப்பட்ட நிலையில், கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் செயல்பட்டதாக மதிமுக சட்ட திட்டங்களின்படி,
புதிய கட்சி துவக்கம்
துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்தார்.
இந்நிலையில், இன்று புதியக் கட்சியை அவர் துவங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், தனது கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். கட்சியின் கொடி 75% சிவப்பும், 25% கருப்பும் நிறைந்திருக்கின்றன.
மேலும், கொடியின் வலது புறத்தின் மேற்பகுதியில் ஏழு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தனது கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.