யூடியூப் சேனலுக்கு ஆப்பு? TTF வாசனுக்கு விழும் தொடர் பேரிடி!
டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து,
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சேனல் முடக்கம்?
மேலும், அவரது youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசன் youtube சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
