இனி 'டிடிஎஃப் வாசன்' பைக் ஓட்ட முடியாது; ஓட்டுநர் உரிமம் ரத்து - RTO அதிரடி நடவடிக்கை!

Tamil nadu Kanchipuram
By Jiyath Oct 07, 2023 05:38 AM GMT
Report

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர். 

டிடிஎஃப் வாசன்

கடந்த 17ம் தேதி பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

இனி

இதனையடுத்து அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாசனை கைது செய்தனர்.

பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் டிடிஎஃப் வாசன்.

டிடிஎஃப் வாசனின் 'யூடியூப் சேனலை மூடிவிடலாம், பைக்கை எரித்து விடலாம்’ - நீதிபதி காட்டம்!

டிடிஎஃப் வாசனின் 'யூடியூப் சேனலை மூடிவிடலாம், பைக்கை எரித்து விடலாம்’ - நீதிபதி காட்டம்!

ஓட்டுநர் உரிமம் ரத்து

இதனை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் டிடிஎஃப் வாசனின் யூடியூபை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இனி

இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.