திருப்பதியில் பிராங்க் வீடியோ; சர்ச்சையில் டிடிஎஃப் வாசன் - நடந்தது என்ன?
டிடிஎஃப் வாசன் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிடிஎஃப் வாசன்
திருப்பதி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டிடிஎப் வாசன், அவருடைய நண்பர் அஜீஸ் உட்பட சிலர் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அறையின் கதவை திறந்து விடும்,
தேவஸ்தான ஊழியர் போல அஜீஸ் சென்று, காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல பாவலா செய்கிறார். உடனே, பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்புகின்றனர்.
சர்ச்சை வீடியோ
ஆனால் கதவு திறக்கபடாமல் இருக்கவே நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். அப்போது அஜீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார். இதனை வீடியோ எடுத்து tirupathi Funny video என்ற பெயரில் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.
Be responsible bro @TTFvasan_.#TTFVasan #Tirupati pic.twitter.com/0u9xVmAf1P
— Sanjay S (@0xSanjayS45) July 11, 2024
இதனைத் தொடர்ந்து, ப்ராங்க் வீடியோ எடுத்த டிடிஎப் வாசன், அஜீஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.