மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் - என்ன நடந்தது?
யூடியூபர் டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டிடிஎப் வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வந்தார்.
அதிவேகமாக பைக்கை ஓட்டி தற்போதையை இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் இவர் அவ்வப்போது எதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.
என்ன நடந்தது?
அதன்படி, இவர் சமீபத்தில் கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த பாம்பை லைசன்ஸ் பெற்று வளர்த்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில்,
லைசன்ஸ் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக டிடிஎப் வாசனிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.