ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இப்படி செய்யலாமா? தொடரும் டிடிஎப் வாசன் அட்ராசிட்டி!

Youtube Chennai Viral Video Social Media
By Swetha May 17, 2024 04:28 AM GMT
Report

யூடியூபர் டிடிஎப் வாசன், ஓட்டுநர் உரிமம் ரத்தான பிறகும் கார் ஓட்டும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிடிஎப் வாசன்  

சமூக வலைதளங்களில் பிரபலமானவராக வலம் வரும் டிடிஎப் வாசன். இவருக்கு 2k கிட்ஸ் மத்தியில் பெரிய மவுசு இருக்கிறது.இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களிடையே பிரபலமானார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இப்படி செய்யலாமா? தொடரும் டிடிஎப் வாசன் அட்ராசிட்டி! | Ttf Vasan Drives Car Without License

குறிப்பாக அதிவேகமாக பைக்குகளை ஓட்டுவது, அதில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களை செய்வது தொடர்பான வீடியோக்களை அவர் பதிவேற்றினால் அதற்கெனவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். 

இந்நிலையில் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்ல முயன்ற டிடிஎப் வாசன், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முயற்சித்த போது விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன்

எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன்

ஓட்டுநர் உரிமம்

சுமார் 6 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இப்படி செய்யலாமா? தொடரும் டிடிஎப் வாசன் அட்ராசிட்டி! | Ttf Vasan Drives Car Without License

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கார் ஓட்டுவது போன்ற விடியோவை வெளியிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு, லைசன்ஸ் இல்லாமல் எப்படி கார் ஓட்ட முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு வீடியோவில், தான் கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளதால், குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் முறைகேடு அல்லது மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.