80கி.மீலே போங்க.. கதறிய ஜி.பி. முத்து - மரண பயத்தை காட்டிய TTF வாசன்!

Tamil nadu Viral Video GP Muthu
By Sumathi Sep 19, 2022 11:21 AM GMT
Report

ஜி.பி.முத்து, TTF வாசன் உடன் சேர்ந்து அதிவேகமாக பைக்கில் பயணம் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TTF வாசன்

TTF வாசன் என்ற இளைஞர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், பைக்கில் சாகசங்கள் செய்து அதனை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். 20 லட்சத்திற்கும் மேலான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.

80கி.மீலே போங்க.. கதறிய ஜி.பி. முத்து -  மரண பயத்தை காட்டிய TTF வாசன்! | Ttf Vasan Adventure Bike Ride With Gp Muthu

இவருக்கு 2கே கிட்ஸ் ரசிகர்கள் ஏராளம். இவர் கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் கொண்டாடினார். அதற்கு அவருக்காக அங்கு கூடிய ரசிகர் பட்டாளத்தை கண்டு மக்கள் மிரண்டனர்.

பைக் ஸ்டண்டுகள்

அதனைத் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு உள்ளானார். முன்னதாக, பைக் ஸ்டண்டுகள், அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்ற செயல்களுக்காக இவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட TTF வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும்,

அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் டிக்டாக் புகழ் ஜி.பி. முத்துவை, TTF வாசன் சந்தித்துள்ளார். இருவரும் பைக்கில் பயணம் செல்ல முடிவு செய்கின்றனர்.

 கதறிய ஜி.பி. முத்து

தொடர்ந்து பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லை என்று கூற என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என்று வாசன் தெரிவிக்கிறார். பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பியதாக கூறி கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர்.

அதன்பின், வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் வாசன் பைக்கை ஓட்டுகிறார். இதனைக் கண்டு அலறிய ஜி.பி.முத்து 80லே போகுமாறு கூறி கதறுகிறார். இதனை காமெடியாக எடுத்துக் கொண்ட TTF வாசன் எதிரில் வாகனங்கள் வரும் நிலையில் கையை விட்டு ஓட்டுகிறார்.

கண்டனம்

இதில் குறிப்பாக ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கண்டனங்கஆளியும் பெற்றுள்ளது. மேலும், பலர் இவ்வாறு சாலை விதிகளை மீறும் TTF வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.