திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் இல்லாமல் தரிசனம்? தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் மூத்த குடிமக்கள் தரிசனம் தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
மூத்த குடிமக்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு நடைபாதையில் செல்லும் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது. ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் மற்றும் கட்டண தரிசன டிக்கெட் போன்வற்றையும் முன்பதிவு செய்ய முடியும். மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
தேவஸ்தானம் விளக்கம்
இந்நிலையில், மூத்த குடிமக்கள் டிக்கெட் இல்லாமலேயே தரிசனம் செய்யலாம் என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேவஸ்தானம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தினந்தோறும் 1000 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாதமும் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு 3 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் சரியான தகவல்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tirumala.org, https://ttdevastanms.ap.in ஐ மட்டுமே பார்த்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.