25 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம் - 10 அடிக்கு சுனாமி அலை வரலாம் - பீதியில் உறைந்த மக்கள்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று காலை 8 மணிக்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரிக்டர் அளவில் சுமார் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தைவான் நாட்டின் ஹுவாலியன் நகரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், 34 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 அடிக்கு சுனாமி
இந்த நிலநடுக்கம் காரணாமாக தைவான் நாட்டு தலைநகர் தைபே மற்றும் ஹூவாலியன் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு சரிந்துள்ளனசேதம் விவரம் குறித்த தகவல்கள்.
இதுவரை வெளியாகாத நிலையில், தைவான் ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை குறிப்பாக, ஜப்பானில் மியூகோசிமா பகுதியில் 10 அடிக்கு மேல் சுனாமி அலையின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ளது.
?BREAKING: Multiple buildings have reportedly collapsed in Taiwan following a preliminary 7.5 magnitude earthquake.
— AJ Huber (@Huberton) April 3, 2024
The video is reportedly from Hualien, Taiwan.pic.twitter.com/qIrOkkAzWY