கதிகலங்க வைக்கும் வீடியோ - அதிபயங்கர நிலநடுக்கம்...சுனாமி ஆபத்து - ஊருக்குள் வந்த கடல் நீர்..!
அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிபயங்கர நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12:40 மணியளவில் அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் நாட்டின் மேற்குக் கடலோர அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் ஜப்பான் மட்டுமில்லாமல் தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
இதற்கிடையில், ஜப்பானின் கரையோர பகுதியான இஷிகாவா, நிகாடா, டோயாமா போன்ற மாகாணங்களின் மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புக தொடங்கியுள்ளது. இது தொடர்பான விடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் வர தொடங்கிய கடல் நீர்
— velmurugan (@velmurugantheni) January 1, 2024
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது pic.twitter.com/DbDdLlN6LR