மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை - எச்சரிக்கும் டிரம்ப் மார்க்
ஜுக்கர்பெர்க் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பார் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்க் ஜுக்கர்பெர்க்
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தனக்கு எதிராக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 அதிபர் தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.
மேலும், மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சில நாட்களுக்கு முன் கொரோனா தொடர்பான பதிவுகளை சென்சார் செய்ய பைடன் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது அதனால் அப்பொழுது சென்சார் செய்தோம் என மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
