கமலா ஹாரிஸ் என் மனைவி போல தோற்றமளித்தார் - நேர்காணலில் வாய் விட்ட டிரம்ப்

Donald Trump Kamala Harris Elon Musk US election 2024
By Karthikraja Aug 13, 2024 12:34 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நேர்காணல் செய்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல்

வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். 

donald trump vs kamala harris

இந்நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டொனால்டு டிரம்பை நேர்காணல் செய்தார். இந்த நேரலை எக்ஸ் தளத்தில் நடைபெற்றது. 

டிரம்பிற்கு மாத மாதம் 376 கோடி வழங்கும் எலான் மஸ்க் - என்ன காரணம் தெரியுமா?

டிரம்பிற்கு மாத மாதம் 376 கோடி வழங்கும் எலான் மஸ்க் - என்ன காரணம் தெரியுமா?

டொனால்டு டிரம்ப்

நேர்காணல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்த உரையாடல் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எக்ஸ் தளத்தின் மீது நடைபெற்ற சைபர் தாக்குதலால் நேரலை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 13 லட்சம் பேர் இந்த நேரலையை பார்வையிட்டனர். 

donald trump elon musk interview in x space

இதில் பேசிய டிரம்ப், அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று இருக்காது என பேசினார்.

கமலா ஹாரீஸ்

மேலும், ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா தலைவர்கள் தங்கள் நாட்டின் நிர்வாகத்தில் உச்சத்தில் உள்ளனர். விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் ஆகியோர் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் இந்த தலைவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள், ஆனால் அதுவும் அன்பின் ஒரு வடிவம் என்று அவர் கூறினார்.

மேலும், சமீபத்தில் டைம் இதழின் அட்டைப்படத்தில் வெளியான கமலா ஹாரிஸின் புகைப்படம் குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ​​"கமலா ஹாரீஸ், எங்கள் சிறந்த முதல் பெண்மணி மெலனியாவைப் போலவே தோற்றமளித்தார்," என்று பேசினார். அவரின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது.