ஆட்சிக்கு வரும் முன்பே.. குறிவைக்கும் டிரம்ப் - 3 நாடுகளை இணைக்க மாஸ்டர் பிளான்!
டிரம்ப் 3 முக்கியமான நாடுகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கிய, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தொடர்ந்து வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இவர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தில், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
பக்கா பிளான்..
ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஏன் 10 கோடி டாலருக்கு கனடாவிற்கு உதவ வேண்டும். அவர்கள் வறுமையை நோக்கி செல்கிறார்கள். கனடாவிடம் சொந்த நாட்டு பாதுகாப்பிற்கு பணம் இல்லை. இது எல்லாம் சரியாக ஒரு வழி இருக்கிறது. கனடா அமெரிக்காவின் ஒரு அங்கம் ஆகலாம்.
50 மாகாணங்கள் உள்ளன. இதில் 51வது மாகாணமாக கனடா மாறலாம். அவர்களுக்கு பாதுகாப்பு செலவு இருக்காது. மற்ற செலவுகளும் குறையும். அதோடு வேகமாக வளரவும் முடியும். கனடாவை அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.