ட்ரம்ப்பின் பக்கத்தை முடக்கிய யூ-ட்யூப் - ஃபேஸ்புக், ட்விட்டரை தொடர்ந்து நடவடிக்கை

youtube trump america
By Jon Jan 13, 2021 11:32 AM GMT
Report

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்வியை ட்ரம்ப் இன்று வரை ஏற்றுக்கொள்ளாமலே இருந்து வருகிறாற். தேர்தல் முடிவுகளை மாற்ற ட்ரம்ப் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையை தூண்டினார் என ட்ரம்ப்பின் சமூக ஊடக கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. தற்போது ட்ரம்ப்பின் சேனலை முடக்கியுள்ளது யூ-ட்யூப் நிறுவனம்.

வன்முறையை தூண்டும் விதத்தில் வீடியோ வெளியிட்டார் என்பதற்காக அவருடைய பக்கம் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.