பெண்களுடன் நடனம்; ரிசார்ட் நகரமான “காஸா” - டிரம்ப் வெளியிட்ட AI வீடியோவால் வெடித்த சர்ச்சை!

Benjamin Netanyahu Donald Trump Viral Video Elon Musk
By Sumathi Feb 27, 2025 01:15 PM GMT
Report

 ட்ரம்ப் பகிர்ந்த AI வீடியோ ஒன்று படு வைரலாகி வருகிறது.

போருக்கு பின் காஸா

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர், பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இதில், காஸாவில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக போர் தீவிரமடைந்து வருகிறது.

பெண்களுடன் நடனம்; ரிசார்ட் நகரமான “காஸா” - டிரம்ப் வெளியிட்ட AI வீடியோவால் வெடித்த சர்ச்சை! | Trump Shares Ai Visuals About Gaza Viral

தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டு, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்பின், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்படும். போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை அமெரிக்காவே சொந்தமாக்கி, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டுவசதி உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்யும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கோல்டன் விசா; இந்தியர்களுக்கு ஆப்பு - என்ன காரணம்?

அமெரிக்காவில் கோல்டன் விசா; இந்தியர்களுக்கு ஆப்பு - என்ன காரணம்?

வீடியோ வைரல்

இந்நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

AI video clips

அதில், கடற்கரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் மது அருந்துவது போன்ற காட்சிகளும் எலான் மஸ்க் நடைப்பயணம் செல்வது போன்ற காட்சிகளும் குழந்தைகளுக்கு பணத்தை வாரி இறைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், கேளிக்கை விடுதியில் பெண்களுடன் ட்ரம்ப் நடனமாடுவது, குழந்தைகள் சுதந்திரமாக ட்ரம்ப் முகம் பொறித்த பலூன்களை வைத்து விளையாடுவது, கடைகள் முழுக்க ட்ரம்ப்பின் சிறிய உருவச் சிலைகள் விற்பனை, கடற்கரையில் உணவு உட்கொள்வது, சாலைகளில் சொகுசு கார்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.