2025 எந்த நாட்டுக்கு மிகவும் மோசம்; நாஸ்ட்ரடாமஸ் விட்டு சென்ற பகீர் கணிப்பு!
எந்த நாடு பெரும் சவால்களை சந்திக்கும் என்பது குறித்து நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் பகீர் கிளப்பியுள்ளது.
நாஸ்ட்ரடாமஸ்
பிரென்ச் ஜோதிடர் நாஸ்ட்ரடாமஸ். 1500 காலகட்டங்களில் வாழ்ந்த இவர் உலக நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
குறிப்பாக அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சி, செப்டம்பர் 11 இரட்டை கோபுரம் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சரியாக கணித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு மோசம்
அந்த வரிசையில், 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சம்பவங்கள் குறித்த அவரது கணிப்புகள் தற்போது வைரலாகி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே தொடங்கிய போர் முடிவுக்கு வரும். இந்த போர் முடிவுக்கு வர துருக்கி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உதவியாக இருக்கும்.
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு மிக மோசமான ஆண்டாக இருக்கும். பிளேக் நோயை போன்று புதிய நோய் பரவும். பலர் உயிரிழக்க நேரிடும். மிகப்பெரிய விண் கல் பூமியை தாக்கலாம். பூமிக்கு அருகே நெருங்கி வரலாம்.
அந்த விண்கல் பூமி மீது விழுந்து ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும். பிரேசில் கடுமையான வெள்ளம் மற்றும் காட்டுத் தீயால் பாதிக்கப்படும். இந்த ஆண்டு முதல் மேற்கத்திய நாடுகளின் பவர் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.